ஞானசார தேரர் கைதி ஆடையுடன் நீதிமன்றில் ஆஜர் – வழக்கு ஒத்திவைப்பு!

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

இதேவேளை, ஞானசார தேரருக்கு முன்னதாக விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனை தொடர்பிலும் தற்போது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் உயர் நீதிமன்றம் இரத்து செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஞானசார தேரர் தனது முன்னைய ஆறு வருட சிறைத்தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சுமார் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனையை அனுபவித்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவரைக் கைது செய்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான இஸ்லாம் மத அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore