BREAKING NEWS : ஷிரந்தி ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரிலிய சவிய அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையூட்டல் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள், ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது நுகேகொடையில் உள்ள இல்லத்திற்குச் சென்றதாகவும், அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகியுள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

சிரிலிய சவிய அமைப்புடன் தொடர்புடைய நிதி விவகாரங்கள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முன்னதாக FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு இலங்கைக்கு திரும்பியிருந்தார். நாடு திரும்பியதன் பின்னர், தன்னை கைது செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டு முன்பிணை கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த முன்பிணை மனு தொடர்பில் FCID பொறுப்பதிகாரி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது நிலைப்பாட்டை முன்வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ள

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore