ஹட்டனில் சாரதியின் ஒரு தவறால் கட்டுப்பாட்டை இழந்த லொறி! மின் கம்பத்துடன் மோதி விபத்து – பெண் நூலிழையில் உயிர்தப்பினார்

ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்டபோது, சாரதியின் கவனக்குறைவால் லொறி கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (11) முற்பகல் சுமார் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக சாரதி அதனை இயக்கியுள்ளார். இதன்போது, பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக எக்ஸிலரேட்டரை மிதித்ததால் லொறி திடீரென வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, அருகிலிருந்த மின் கம்பத்துடன் மோதி நின்றுள்ளது.

பெண் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார்!

லொறி கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதன் அருகாமையில் பெண் ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

லொறி கவிழ்ந்திருந்தாலோ அல்லது பெண் நடந்து சென்ற திசையில் சென்றிருந்தாலோ, அவரும் விபத்தில் சிக்கியிருக்கக்கூடிய ஆபத்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதனால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

லொறிக்கு பலத்த சேதம்!

இந்த விபத்தில் லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி பிரேக்கிற்குப் பதிலாக எக்ஸிலரேட்டரைத் தவறுதலாக மிதித்ததே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

வாகனங்களை நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் இயக்கும்போது, குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகரப் பகுதிகளில், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.

சாரதியின் ஒரு சிறிய தவறு பாரிய விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பதற்கு ஹட்டனில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

தகவல்: செ. திவாகரன்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore