மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க நூல்கள், மேசைப்பந்தாட்ட உபகரணம் அன்பளிப்பு!

வாசிப்பு மாதத்தை முன்னிட்டும், மேசைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், OSSCO & SONS FOUNDATION நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நூல்கள் மற்றும் மேசைப்பந்தாட்ட விளையாட்டுக்கான உபகரணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், OSSCO & SONS FOUNDATION நிறுவனத்தின் தலைவர் கே.எல்.எம். ஸகி அவர்களினால் வழங்கப்பட்ட நூல்களும், மேசைப்பந்தாட்ட விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் Receiving Post உபகரணமும் பாடசாலை அதிபர் சூரியகுமார் பிரியசாந்தினியிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மோகனராசு அவர்களும் கலந்துகொண்டார்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதோடு, விளையாட்டுத் துறையில் அவர்களின் திறமைகளை மேலும் வளர்ப்பதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் இவ்வன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore