நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் குறைப்பு

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), நவம்பர் 2026 மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விலைக்குறைப்பு வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கியுள்ளது.

புதிய விலைத் திருத்தத்தின்படி, ஒரு லீற்றர் Super 98 பெற்றோலின் விலை 4.40 திர்ஹமிலிருந்து 4.16 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கைப் பெறுமதி சுமார் 376 ரூபாயாகும்.

Special 95 பெற்றோலின் விலை 4.28 திர்ஹமிலிருந்து 4.04 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீற்றரின் இலங்கைப் பெறுமதி சுமார் 366 ரூபாயாகும்.

அதேபோன்று, E-Plus 91 பெற்றோலின் விலை 4.21 திர்ஹமிலிருந்து 3.97 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கைப் பெறுமதி சுமார் 359 ரூபாயாகும்.

டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 4.80 திர்ஹமிலிருந்து 4.75 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 430 ரூபாயாகும்.

இந்தப் புதிய விலைகள் 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன.

பெற்றோல் விலைகள் சுமார் 5.5% முதல் 5.7% வரையும், டீசல் விலை சுமார் 1% வரையும் குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்குப் பிராந்திய மோதல்களுடன் தொடர்புடைய சர்வதேச எரிசக்திச் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச எரிசக்திச் சந்தையின் நிலவரங்களுக்கு ஏற்ப ஐக்கிய அரபு இராச்சியம் மாதாந்தம் உள்நாட்டு எரிபொருள் விலைகளை மீளாய்வு செய்து திருத்தி வருகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore