செய்தியாளர் – அன்சத் அஹமட்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மரம் நடுகை நிகழ்வு (5) வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முதல்வர் வைத்திய அத்தியட்சகர் R. பிரபா சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சம்மாந்துறை திட்டமிடல் வைத்திய அதிகாரி R. நியாஸ் அகமது, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் உதார தயானந்த, மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சுற்றாடல் முகாமையாளர் A. L. Safeer ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலரும் இதில் பங்கேற்று மரம் நடுகை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வைத்தியசாலை வளாகத்தை மேலும் பசுமையாக மாற்றும் முயற்சியாக அமைந்தது.








