புதையல் தோண்டிய நபர் ஒருவர் கைது

தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகல பகுதியில் தம்பகல்ல பொலிஸாரால் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு சந்தேகநபர் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாமல்ஓயா பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore