2027 முதல் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை

2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆரம்பப் பருவ சிறுவர் கல்வியானது நாட்டின் ஏனைய கல்விச் செயற்பாடுகளுடன் இணையாகச் செல்ல வேண்டும் எனவும், அதற்கு கல்வி அமைச்சும் பங்களிக்க வேண்டும் எனவும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டார்.

நாட்டில் முன்பள்ளி பாடத்திட்டம் முறைசாரா வகையில் காணப்படுவதுடன், அது இன்னும் ஒரு அரச சேவையாக மாற்றமடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பள்ளி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முறையான நடைமுறையோ அல்லது அவர்களைக் கண்காணிப்பதற்கான அமைச்சோ இல்லை என்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் வலியுறுத்தினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore