3 தகாத உறவுகள் – ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

சிறுமிகள், இளம்பெண்களை கடத்தி பணம் படைத்த பெரும் புள்ளிகளுக்கு அனுப்பிய மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் பில் கேட்ஸ்.

எப்ஸ்டீன் உடனும் பல பெண்களுடனும் கேட்ஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பில் கேட்ஸ்க்கு இருந்த பல தகாத உறவுகள் காரணமாகவே 2021 இல் அவரை மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தனக்கு இருந்த உறவுகளை வைத்து எப்ஸ்டீன் தன்னை மறைமுகமாக மிரட்டி வந்ததாகவும் பில் கேட்ஸ் அண்மையில் பொதுவெளியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் எப்ஸ்டீன் ஆவணங்களின் அடிப்படையில் ஜூன் 10 ஆம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு நடத்திய இரகசிய விசாரணையில் பில் கேட்ஸ் பல முக்கிய உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் தனது சாட்சியத்தில், மூன்று பெண்களுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்பிட்டுக்கொண்டார்.

ரஷ்ய பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா மற்றும் அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா ஆகியோருடன் தனக்கு உறவுகள் இருந்ததாகவும், இதுபற்றி எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்தது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

தொழில்முனைவோர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசல்ரோட்டுடன் மூன்றாவது உறவு கொண்டிருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இந்த உறவுகளுக்கோ அல்லது எப்ஸ்டீனுடனான சந்திப்புகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று கேட்ஸ் மறுத்துள்ளார். எப்ஸ்டீனின் குற்றங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், “எனது துரோகம் குறித்த மேலும் பல பொய்களை இணைத்து கூறி, அவருடன் மீண்டும் இணையுமாறு எப்ஸ்டீன் என்னை வற்புறுத்த முயன்றார்” என்று கேட்ஸ் கூறினார்.

இருப்பினும், எப்ஸ்டீன் தன்னை நேரடியாக பிளாக்மெயில் செய்து மிரட்டவில்லை என்றும், ஆனால் அவரின் செயல்கள் அதை கருத்தில் கொண்டே அமைந்ததாக தான் நம்புவதாகவும் கேட்ஸ் கூறினார்.

தொண்டு வேலைகளுக்கு நன்கொடை பெற செல்வந்தர்களை அறிமுகப்படுத்துவதாக அறிமுகப்படுத்துவதாகக் கூறியதால் மட்டுமே எப்ஸ்டீனைச் சந்தித்ததாக கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மொத்தம் நான்கு ஆண்டுகளில் எப்ஸ்டீனை 12 முதல் 14 முறை சந்தித்ததாகவும், இரண்டு முறை காணொளி அழைப்புகள் மூலம் பேசியதாகவும் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்மையில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களில் தனக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் அதற்கு ரகசியாக மருந்து எடுத்துக்கொண்ண்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததையும் பில் கேட்ஸ் மறுத்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore