அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தின் பீஸ்டர்வில் (Feasterville) பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் (Shelter-in-Place) என்ற அவசர பாதுகாப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு ஆபத்தான இரசாயனப் பொருட்களை கையாளும் Hazmat குழுக்கள் விரைந்து சென்று, ஆபத்தான பொருட்கள் கசிந்துள்ளனவா என்பது குறித்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்ஸ் கவுண்டி (Bucks County) பகுதியில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





