சமூக ஊடகங்களில் சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பகிர்வது குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் பணம் ஈட்டக்கூடிய பல்வேறு நடைமுறைகள் அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் போது பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவது அல்லது அவர்களின் சுவாரஸ்யமான செயல்களைப் பகிர்வது என்ற நோக்கில், பல்வேறு நபர்களும் அமைப்புகளும் சிறுவர்களின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவற்றை வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மற்றும் விலொக்குகள் மூலம் சிறுவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அந்நியர்களுக்கு தெரியவருவதால், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொருத்தமற்ற அல்லது பாலியல் ரீதியான போலியான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் தவறாக பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சமூக ஊடகங்களில் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும்போது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சிறுவர்களின் பராமரிப்புக்கு பொறுப்பான அனைவரும் அதிக விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore