சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் VOG டாக்டர் உதார சி. தயானந்தவுக்கு மகத்தான பிரியாவிடை!

ஷாதிர் ஏ ஜப்பார் || அன்சத் அஹமட்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறப்பு மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் நிபுணராக (VOG) கடமையாற்றிய டாக்டர் உதார சி. தயானந்த அவர்கள், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள நிலையில், அவருக்கான விசேட பிரியாவிடை நிகழ்வு இன்று (08)சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வளாகத்தில் நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் நிபுணர் டாக்டர் எம்.டீ.எம். ரிஹான், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ் அஹமட், பொது வைத்திய நிபுணர் டாக்டர் ஐ.எல்.எம். சபீக் உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தனது பணிக்காலத்தில் நோயாளர்களுக்கான சிறந்த மருத்துவ சேவையை வழங்கியதுடன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் சேவைகளின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் பங்களித்த டாக்டர் உதார சி. தயானந்த அவர்களின் சேவைகள் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

மேலும் இடமாற்றம் பெற்று செல்லவுள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் சிறப்பான மருத்துவ சேவையைத் தொடரவும், எதிர்கால பணிப்பாதை வெற்றிகரமாக அமையவும் வைத்தியசாலை சமூகத்தினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore