அரசாங்கத்தின் அனுசரணையில் வீடற்றவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த வீடுகள் பயனாளிகளின் பாவனைக்காக நேற்று (08) கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு 02, சம்மாந்துறை 11 மற்றும் 12, வீரமுனை 1 மற்றும் 3 ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், கிளீன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலகத்தின் பிரதேச இணைப்பாளருமான வை.பி.எம். நபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், பிரஜா சக்தி தவிசாளர்கள், வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான வீடமைப்புத் திட்டங்கள் மூலம், வீடற்ற மற்றும் வீட்டுத் தேவையுடைய குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வாறான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
புதிய வீடுகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வீட்டுக்கான நீண்டகாலக் கனவை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு பயனாளிகளுக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





