இலங்கைப் பொலிஸாரின் திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்த சீனா உதவி வழங்கவுள்ளது!

இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று (நவம்பர் 24) இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிக்கலான குற்றச்செயல்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய குற்றவியல் முறைகளை அடையாளம் காண்பதற்கான அறிவையும் திறனையும் இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்குவது இந்த உதவியின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்கான பொலிஸாரின் ஆற்றலை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பொலிஸ் நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட இலங்கைப் பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகளும் சீனத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore