ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தம்மாம் சேவை இன்று ரத்து!

சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (12) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாளைய விமான சேவை தொடர்பில் என்ன அறிவிப்பு?

நாளை (13) தம்மாம் விமான சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, தம்மாம் நோக்கிப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது விமானப் பயண விபரங்களை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

பயணிகள் கவனத்திற்கு!

விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பயணச்சீட்டு மாற்றம், மாற்று விமான ஏற்பாடு மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வது சிறந்தது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore