தன்னிச்சை கவிதை போட்டியில் முதலிடம் பிடித்து இறுதிச்சுற்றுக்குத் தெரிவான இளைஞர்

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் நூலக அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் வருடாந்தம் நடத்தப்படும் வாசகர்களுக்கான இலக்கியப் போட்டிகளில், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பொது நூலகத்தை பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற ராசையா கவிஷான், தன்னிச்சைக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பொதுநூலகங்களைச் சேர்ந்த வாசகர்கள் பலரும் கலந்துகொண்டனர். பல்வேறு இலக்கியப் போட்டிகள் இடம்பெற்ற இந்நிகழ்வில், தன்னிச்சைக் கவிதைப் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய ராசையா கவிஷான் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கேம்பிரி மேற்பிரிவைச் சேர்ந்த இவர், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் உறுப்பினரும், தங்கக்கலை பிரஜா சக்தி குழுவின் தவிசாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற நூலக அபிவிருத்தி போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருவதுடன், குறிப்பிடத்தக்க சாதனைகளையும் படைத்து வருகின்றார். அந்த வகையில், இம்முறை தன்னிச்சைக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகியிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore