டெங்கு ஒழிப்புப் பணிகளை அரசியலாக்க வேண்டாம்; சம்மாந்துறையின் நலனில் அக்கறை காட்டுங்கள்!

“நீங்கள் செய்யாத பணியை நாங்கள் செய்துள்ளோம்; முடிந்தால் செய்து காட்டுங்கள்!” – கே.ஆர்.எம். றிஷாட் ஆவேசம்

சம்மாந்துறையில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப் பணிகளை விமர்சிப்பவர்கள், அவற்றுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்த்து, தங்களால் முடிந்தால் அவ்வாறான பணிகளைச் செய்து காட்ட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கே.ஆர்.எம். றிஷாட் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ‘Award of Excellence – 2026’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். ஸபீஸ், சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப் பணிகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கே.ஆர்.எம். றிஷாட் இன்று (19) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.

சம்மாந்துறையில் டெங்கு இல்லை எனக் கூறி, முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப் பணிகளை விமர்சிப்பது பொருத்தமற்றது எனத் தெரிவித்த அவர், தங்களது கட்சியின் தலைவர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோர் முன்னெடுக்காத பணிகளைத் தாங்கள் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் சாதனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வுகளில் அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சம்மாந்துறை மக்கள் ஒரு சிலரின் அரசியல் விமர்சனங்களுக்கோ அழுத்தங்களுக்கோ ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசியல் குறித்து விவாதிப்பதற்குப் பொருத்தமான சந்தர்ப்பங்களில் அதனைப் பேசிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வுகளை அரசியல் விவாதங்களுக்கான மேடையாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். ஸபீஸ், சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப் பணிகள் தொடர்பில் வெளியிட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore