விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் முழுமையாக நிரம்பி வழிகிறது

மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக
நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் இன்று புதன் கிழமை (21 ) காலை முதல் வான் மேவி பாய்கின்றது.

இந்த நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டமும் கேசல்கமு ஓயாவின் நீர்மட்டமும் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

  • மக்களுக்கு எச்சரிக்கை.

இதனால் களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore