அம்பாறை மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் நடமாட்டம்: பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்; ஒருவர் பலி

தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நிந்தவூர் அல் அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) வளாகத்துக்குள் நேற்று (25) இரவு புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த சுமார் 15 பார்ம் ட்ரீ மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன.

கடந்த சில நாட்களாக நாவிதன்வெளி, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமும், அவற்றால் ஏற்படும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன.

இதேவேளை, கடந்த 24ஆம் திகதி நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க மீராதஸ்லிம் என்பவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், நேற்று (25) இரவு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகள் வீதிகளில் நடமாடித் திரிகின்றன.

அத்துடன், கல்முனை லங்கா சதோச களஞ்சியத்தின் முன்பக்கக் கதவு காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டதுடன், அங்கிருந்த பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore