சுற்றுலாத்துறைக்கு பங்களிப்புச் செய்யும் முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில்சார் நெறிமுறைகள், பயணிகளுடனான அணுகுமுறை மற்றும் மனிதாபிமானப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டம், சம்மாந்துறை பிரதேச சபையில் இன்று (28) ஆரம்பமானது.
இதில் சில சாரதிகள் கலந்துகொண்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாளையும் (29) பயிற்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சி நிகழ்வில் கலந்துகொள்ளும் சாரதிகளுக்கு பகற்போசனமும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
எனவே, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நாளைய நிகழ்வில் கட்டாயம் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சாரதிகளின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





