கடற்றொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை – விசாரணை ஆரம்பம்

ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற படகில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று (02) புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், பின்னர் அதில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் படகின் உரிமையாளர் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன மீனவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார்.

6 மீனவர்களைக் கொண்ட குழுவொன்று மீன்பிடி நடவடிக்கைக்காகக் குறித்த படகில் புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், சுமார் 15 கடல் மைல் தொலைவில் வைத்து ஒரு மீனவர் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்று இரவு உணவு உண்பதற்காகத் தேடிய போதே, இவ்வாறு ஒரு மீனவர் காணாமல் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அது குறித்துப் படகில் இருந்த ஏனையோர் படகின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore