போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பொலிஸாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி, அமைச்சர்கள் நிர்மல்குமார், விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போதைப்பொருளை முற்றுலும் ஒழிக்க காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருட்களுகு்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாருக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு பிரச்சனையை உடனடியாக தீர்க்கவும், முழுமையான பாதுகாப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore