காலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பின் போது, டிரமடோல் (Tramadol) மற்றும் பிரெகபலின் (Pregabalin) உள்ளிட்ட சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் ரூ. 1,25,000 பணத்துடன் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சட்டவிரோத மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் வீடு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டபோது இந்த போதை மாத்திரைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (06) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காலி பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





