இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய இன்று (08), நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) ஆகிய நாட்களில் இத்திட்டம் செயற்படுத்தப்படும் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

12 மாவட்டங்களுக்குச் சொந்தமான 72 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களை மையமாகக் கொண்டு இந்த விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அண்மைக்கால தரவுகளின்படி, கடந்த ஜூன் 5ஆம் திகதி வரை 36,168 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மாத்தறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் மூவர் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore