யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரின் சொத்துக்கள், ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2026 பெப்ரவரி 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரின் சட்டவிரோத வருமானத்தில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
இதன்படி, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த நபரின் சொத்துக்கள் அரசுடைமையாக்கும் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில்,
சுமார் ரூ. 695,950 பெறுமதியான ஒரு டிங்கி படகு மற்றும் அதன் இயந்திரம்
சுமார் ரூ. 900,000 பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
அடங்குகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





