3 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது

3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பிரகடனப்படுத்துவதற்கு எதுவுமில்லை என்ற ‘பச்சை வழி’ ஊடாக கடத்திச் செல்ல முற்பட்ட 13 வெளிநாட்டு விமானப் பயணிகளே இன்று (18) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சீன நாட்டு வர்த்தகர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, மலேசிய எயார்லைன்ஸின் MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகள் மற்றும் தேயிலை அடங்கிய பெட்டிகளுக்குள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 212,600 சிகரெட்டுகளைக் கொண்ட 1,063 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore