நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து

உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி பெற்றது.

23-வது உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன.

இன்று (22) காலை 6.30 மணிக்கு நடைபெற்ற ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் எகிப்து அணிகள் விளையாடின.

இதில், போட்டியின் 15-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணிக்காக, ஃபின் சுர்மான் முதல் கோலை போட்டார்.

இதனால், 1-0 என்ற புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து, முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை.

இதனால், 2-வது பாதி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், போட்டியின் 58-வது நிமிடத்தில் எகிப்தின் முஸ்தபா ஜிகோ கோல் போட்டார்.

இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் போட்டி சமன் பெற்றது. தொடர்ந்து 67-வது நிமிடத்தில் அந்த அணியின் முகமது சலா மற்றொரு கோலை போட்டார்.

இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் எகிப்து முன்னிலை பெற்றது.

82-வது நிமிடத்தில் அந்த அணியின் டிரெஜ்குவெட் 3-வது கோலை போட்டார். இதனால், எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்கு சென்றது.

அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. மேலதிக நேரத்தில் கோல் எதுவும் பெறப்படவில்லை.

ஆட்டத்தில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், நியூசிலாந்து அணிக்கு இரு முறையும், எகிப்து அணிக்கு ஒரு முறையும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் ஊடாக எகிப்து அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. நியூசிலாந்து அணி கடைசி இடத்திற்கு சென்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore