கத்தார் இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிலையத்தில் வெடிப்பு – 54 பேர் காயம், 18 பேர் காணாமல் போனதாக தகவல்

கத்தாரின் முக்கியமான இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிலையமான ரசுலஃபான் (Ras Laffan) தொழில்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான்–அமெரிக்க மோதலின் பின்னணியில் ஏற்பட்ட பிராந்திய பதற்றங்களால் முன்னதாக பாதிக்கப்பட்டிருந்த இந்த நிலையத்தில், பணிகள் மீண்டும் தொடங்க முயற்சிக்கப்பட்ட போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பார்சான் (Barzan) எரிவாயு வசதி பகுதியில் பெரும் தீப்பற்றியது.

உடனடியாக அவசர மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கத்தார் உள்துறை அமைச்சகம் பின்னர் வெளியிட்ட தகவலில், ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதை விட காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரசுலஃபான் தொழில்துறை பகுதி பாதிக்கப்பட்டதால், இது உலக எரிவாயு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore