தேர்தல்களின் போது அழியாத பூச்சை பூசுவது நிறுத்தப்படுமா?

நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்கைப் புள்ளடியிடுவதற்கு சமூகமளிக்கும் வாக்காளர்கள் செல்லுபடியான அடையாள அட்டை மூலம் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டயாமாவதுடன், குறித்த அனைத்து வாக்காளர்களும் அழியாத பூச்சைப் பயன்படுத்தி பொருதடதமான அடையாளத்தில் புள்ளடியிடுவது கட்டாயமானதாகும்.

இப்பணிகள் இரண்டிலும் எதிர்பார்க்கப்படுவது வாக்காளர் ஒருவர் ஒரு தேர்தலில் வாக்கெடுப்பின் போது ஒன்று மேற்பட்ட தடவைகள் வாக்களிப்பதை தடுப்பதேயாகும்.

ஒரே எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒன்றுக்கொன்று வேறான முறைமைகள் இரண்டினைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களில் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு தடையாக உள்ளமையும், அரசுக்கு மேலதிக செலவும் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால், அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை பொருத்தமான வகையில் அடையாளமிடல் தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் நீக்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்க்காணும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குவதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு

1988ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு

(262 ஆம் அத்தியாயமான) உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ. பிரிவு

1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore