கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) 2025 (2026) பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தம் (Re-Scrutiny / Re-Correction) கோருவதற்கான விண்ணப்பங்கள் 2026 ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
விண்ணப்பங்கள் இணையவழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
📝 விண்ணப்ப விபரங்கள்
📅 விண்ணப்ப காலம்: 2026.06.25 – 2026.07.08
💰 கட்டணம்: ஒரு பாடத்திற்கு ரூ. 250
💳 கட்டண செலுத்தும் முறை:
இணையவழி (Credit / Debit Card)
தபால் நிலையங்கள் ஊடாக
🌐 விண்ணப்ப இணைப்பு
பரீட்சைகள் திணைக்கள E-Testing Portal: https://onlineexams.gov.lk/eic
📌 விண்ணப்பிக்கும் முறை
- பரீட்சைக்கு பயன்படுத்திய தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி E-Testing Portal-இல் உள்நுழையவும்.
- “G.C.E. O/L Examination 2025 (2026) – Application for Re-Scrutiny of Results” என்பதைத் தெரிவுசெய்யவும்.
- தேவையான தகவல்களை பூர்த்தி செய்து மீள் திருத்தம் கோரும் பாடங்களைத் தெரிவுசெய்யவும்.
- கட்டணத்தை இணையவழியாக அல்லது தபால் நிலையம் ஊடாக செலுத்தவும்.
- இறுதியாக விண்ணப்பத்தின் PDF பிரதியை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
⚠️ குறிப்பு: விண்ணப்பங்கள் 2026 ஜூலை 08 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், தகுதியான மாணவர்கள் காலதாமதமின்றி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





