நீதியரசர் வெற்றிடங்கள் தொடர்பில் விவாதம் கோரும் எதிர்க்கட்சி

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பாராளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கோருகின்றனர்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 83(1) இன் கீழ் விவாதமொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக, குறித்த விவாதத்தை கோரும் பிரேரணைக் கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் இன்று (26) பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுத்தனர்.

உயர் நீதிமன்றத்தில் 8 க்கும் அதிக நீதியரசர் வெற்றிடங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருப்பது, நீதித்துறைச் செயற்பாடுகளைப் பாதிப்பதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நீதியரசர் வெற்றிடங்கள் நீடிப்பதன் விளைவாக, சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore