இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், சம்மாந்துறை பொலிஸார் பல மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
போக்குவரத்து விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றுவதுடன், பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணிந்து பயணிக்குமாறும் சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.





