சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள CITIC Tower (China Zun) எனப்படும் 109 மாடி கொண்ட, நகரின் மிக உயரமான கட்டிடத்தில் ஒரு சிறிய விமானம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடக தகவல்களின்படி, இந்த விபத்துக்குப் பிறகு அவசர மீட்பு குழுக்கள் விரைந்து வந்து கட்டிடத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், கட்டிடத்தின் மேல் பகுதிகளில் இருந்து இடிபாடுகள் கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆரம்ப தகவல்களின் படி, அந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட “Sunward SA60L Aurora” லைட் ஸ்போர்ட் விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தனது திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி கட்டிடத்தில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது விமானத்தில் ஒரே ஒருவர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





