உலகின் முதல் முழுமையாக ரோபோக்களால் சேவையளிக்கப்படும் ஹோட்டலை 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் திறக்க சீனா திட்டமிட்டுள்ளது.
ஷென்ழென்–ஜோங்ஷான் இணைப்புப் பாலத்தின் (Shenzhen-Zhongshan Link) மேற்கு செயற்கைத் தீவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், வரவேற்பு, பயணப் பொதிகள் எடுத்துச் செல்லுதல், அறைச் சேவை, அறை பராமரிப்பு, பாதுகாப்பு ரோந்து மற்றும் விருந்தினர்களுக்கு உதவி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ரோபோக்கள் மூலம் வழங்கப்படவுள்ளன.
இந்த ஹோட்டல் 2026ஆம் ஆண்டின் இறுதியில் பரிசோதனை அடிப்படையிலான சேவையைத் தொடங்கவுள்ளதுடன், குறித்த செயற்கைத் தீவை ரோபோடிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





