உலகக் கிண்ண கால்பந்து 2 ஆவது சுற்று போட்டியில் மெக்சிகோ அணி, ஈகுவடாரை 2 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று காலை 7.30 மணிக்கு மெக்சிகோ சிட்டியில் குறித்த போட்டி இடம்பெற்றது.
போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணி வீரகளும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் போது போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் குயினோன்ஸ் கோல் அடித்து மெக்சிகோ அணியை முன்னிலை பெற செய்தார்.
தொடர்ந்தும் 31 ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ரவுல் ஜிமினெஸ் கோல் அடிக்க முதல் பகுதி நேர போட்டி முடிவில் மெக்சிகோ 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பகுதி நேர போட்டியில் கோல் அடிக்க ஈகுவடார் அணி கடுமையாக முயற்சித்தது. இருப்பினும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. அப்போது ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் காதில் கையை மறைத்து பேசியதற்காக ஈகுவடார் வீரர் பியரோ ஹின்காபிக்கு நடுவரால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி 3 ஆவது சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியது.





