வெல்லாவெளியில் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

​நேற்று (01) மாலை தமது வீட்டில் இருந்து வௌியில் சென்ற நபர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் ஏற்பட்ட சந்தேகத்தில் உறவினர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில் இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு மருத்துவப் சிகிச்சைகளை பெற்றுவந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இன்று (02) காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டார்.

விசாரணைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ​

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore