கிழக்கு மாகாண பூப்பந்தாட்டப் போட்டி: சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு வெண்கலப் பதக்கம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த ஜூன் 30, ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் திருகோணமலையிலுள்ள மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டித் தொடரில், பாடசாலையின் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

இச்சாதனையைப் பாராட்டிய பாடசாலை அதிபர் அல்-ஹாஜ் ARM. உவைஸ் (நலீமி) (SLPS-I) அவர்கள், அணி வீரர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும், அணியை வழிநடத்திய பூப்பந்தாட்டப் பொறுப்பாசிரியர் K.L.M. சப்ரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான A.C. முகம்மது நவாஸ், A. ஹலீம் அஹ்மத், Z.A. சித்தி ருமைசா பஸ்லியா, பாஸிலா, பாத்திமா, கோபிகா ஆகியோரின் அர்ப்பணிப்பையும் அதிபர் பாராட்டியுள்ளார்.

இச்சாதனை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டுத் துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்:
உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவு
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore