East Antarctica பனிக்கடியில் 34 மில்லியன் ஆண்டுகள் பழமையான நிலப்பரப்பு கண்டுபிடிப்பு

East Antarctic Ice Sheet-ன் கீழ், விஞ்ஞானிகள் 34 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பை கண்டுபிடித்துள்ளனர்.

Satellite படங்கள் மற்றும் radio echo sounding தொழில்நுட்பம் மூலம் சுமார் 12,000 சதுர மைல் பரப்பளவு கொண்ட பகுதி ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆழமான ஆறுகளின் பள்ளத்தாக்குகள், கூர்மையான மலைத்தொடர்கள் மற்றும் பரந்த மேடுகள் கொண்ட ஒரு பழமையான நில அமைப்பு கண்டறியப்பட்டது.

பொதுவாக பனிப்பாறைகள் வேகமாக நகரும் போது கீழுள்ள கற்களை அழித்து விடும். ஆனால் இந்த பகுதியில் உள்ள பனி மிகவும் நிலையாக இருந்ததால், அந்த பழைய நில அமைப்பு பெரிதாக சேதமின்றி பாதுகாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா வெப்பமான சூழ்நிலையில் தாவரங்களும் அடர்ந்த காடுகளும் இருந்திருக்கலாம் என்பதற்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

மேலும், இந்த நிலவடிவத்தை அறிதல் எதிர்கால காலநிலை மாற்றங்களை கணிக்க முக்கியமாகும். நிலத்தின் வடிவம் பனியின் ஓட்டத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால், சில பகுதிகளில் பனி வேகமாக உருகி கடலுக்கு செல்லலாம்; சில இடங்களில் அது மெதுவாக இருந்து நிலைத்திருக்கவும் முடியும்.

இவ்வாறு, பனிக்கடியில் உறைந்த இந்த பழமையான உலகம், எதிர்கால காலநிலை மாற்றத்தை புரிந்துகொள்ள முக்கியமான தகவல்களை வழங்குகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore