குரோஷியாவை அபாரமாக வீழ்த்திய போர்த்துகல்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வீழ்த்தியது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது வௌியேற்றும் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

இதில், அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்த்துகல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.

எனினும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

2-வது பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக போராடின.

அப்போது ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை போர்த்துகல் தீவிரப்படுத்திய நிலையில், ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலை ஏற்படுத்தினார்.

இதையடுத்து 2-வது கோலுக்காக இரு அணிகளும் கடுமையாக போராடினாலும் அதன்பின் எந்த கோலும் பதிவாகவில்லை.

90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

அப்போது ஆட்டத்தின் 90+4 நிமிடத்தில் போர்த்துகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

இதையடுத்து குரோஷியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் போர்த்துகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 16 அணிகளைக் கொண்ட அடுத்த சுற்றுக்கு போர்த்துகல் முன்னேறியது.

போர்த்துகல் அணிக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறியது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore