வீடியோ : பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர்.

வீடியோ பார்வையிட
Click link : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1289

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அந்த பேருந்தில் பழுதடைந்த மற்றொரு பேருந்தின் பயணிகள் உள்பட 48 பயணிகள் இருந்தனர்.

டானாசாரில் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 80 அடி பள்ளத்தில் விழுந்தது.

தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது.

பேருந்து விபத்தில் பலியானோருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore