உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும்.

அதேநேரம், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3 சதவீத அதிகரிப்பை எட்டியுள்ளது.

மேர்பன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 73.25 அமெரிக்க டொலராகவும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore