பல பகுதிகளில் இன்று 4 மணிநேர நீர்வெட்டு

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (22) பல பகுதிகளில் 4 மணிநேரம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கண்டி பிரதான நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பின்வரும் சேவை நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட பகுதிகளுக்குத் தற்காலிகமாக நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அச்சபை குறிப்பிட்டுள்ளது:

ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம்:

உடுவாவல, பொல்வத்த வீதி,க்ளெவத்த, வஸ்கேவத்த, உட பொகலவல, பள்ளே பொகலவல, பிஹாஓயேவத்த, அஹஸ்லியத்த, கொட்டுவேவத்த, நாகஹமுல வீதி, தவலன்கொட, பலகொல்ல, ஹபுகொட, பட்டியாவத்த, ரஜபிஹில்ல, மொரகஹவெல, அத்தரகம, உல்லதுபிட்டிய வீதி, பொஹோரபேதென்ன வீதி மற்றும் அத்தரகம தெகிந்த வீதி.

மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம்:

கெவும்கோஹே வீதி, கோணிகொட, ஜயந்தி வீதி, குருகெட்டே, பல்கும்புர, இடமேகம, அம்பேகம, கொரொக்கஸ்அங்க வீதி, எளமல்பத, கொட்டுத்தன்ன, பெதியகொடவத்த, களுவான, போதொட்ட, ஹரங்கஹதென்ன, தொடங்கஹதென்ன, கும்புறேகெதர, தெம்பரலொவ, திப்புட்ட மற்றும் தலபெல்லேகொட வீதி.

மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம்:

படுகொட, எஹெலகஸ்ஹின்ன, தித்தேனிய, ஓவிஸ்ஸ, வடகொட, தொம்பகம்மன, ஹேதெனிய, சூரியகும்புர, அம்பருப்ப, ஹரங்கஹவ, பொக்காவல, வலதென்ன மற்றும் பத்திராத.

கலகெதர சேவை நீர்த்தேக்கம்:

கலகெதர, வேபட, போயகொட சுற்றியுள்ள பகுதிகள், ரம்புக்கனை வீதி, பொஹொலியத்த வீதி மற்றும் குருணாகல் வீதி.

மாவத்தகம சேவைப் பகுதி:

மாவத்தகம, பரந்தன வீதி, ரம்புக்கனை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore