‘Godzilla vs. Kong’ திரைப்பட நடிகை கேலி ஹாட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பு

அமெரிக்கா: Godzilla vs. Kong திரைப்படத் தொடரில் ஜியா (Jia) கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் கவனம் பெற்ற காது கேளாத இளம் நடிகை கேலி ஹாட்டில் (Kaylee Hottle), அமெரிக்காவின் மெரிலாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 18.

2021 ஆம் ஆண்டு வெளியான Godzilla vs. Kong திரைப்படத்திலும், 2024 ஆம் ஆண்டு வெளியான Godzilla x Kong: The New Empire திரைப்படத்திலும் ஜியா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த துயரச் செய்தியை அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் (Joshua Hottle), அமெரிக்க சைகை மொழி (ASL) மூலம் வெளியிட்ட காணொளியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, ஜூலை 21 ஆம் தேதி அதிகாலை சுமார் 2.50 மணியளவில் மெரிலாண்ட் மாநிலத்தின் இஜாம்ஸ்வில் (Ijamsville) பகுதியில் ஒரே வாகனம் தொடர்பான விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக வேகத்தில் பயணித்ததே விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

வாகனத்தை ஓட்டிய 19 வயதுடைய இளைஞர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பயணி மருத்துவ சிகிச்சையை மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலி ஹாட்டில் கல்வி கற்ற Texas School for the Deaf நிறுவனம் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டதுடன், சம்பவம் தொடர்பாக ஊகங்களைத் தவிர்த்து, குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, Godzilla x Kong திரைப்படத்தை தயாரித்த Warner Bros. நிறுவனமும் சமூக வலைத்தளத்தின் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

காது கேளாத சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை ஹாலிவுட்டில் வலுப்படுத்திய இளம் நடிகையாக கேலி ஹாட்டில் பரவலாகப் பாராட்டப்பட்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore