சம்மாந்துறையைச் சேர்ந்த B. றுஸைனி அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் நடத்தப்பட்ட Sworn Translator (Tamil / English) பரீட்சையில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, சத்தியப்பிரமாண தமிழ் / ஆங்கில மொழிபெயர்ப்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஜனவரி மாதம் நடைபெற்ற இப்பரீட்சையில் 100 இற்கு 78 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற அவர், 2026 ஜூலை 20 ஆம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் கௌரவ பதில் நீதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இந்நியமனத்தின் மூலம், நீதிமன்றங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு சேவைகளை சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளராக வழங்கும் அதிகாரத்தை அவர் பெற்றுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆந் திகதி பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் 6ம் இடத்தைப் பெற்று கட்டடத் திணைக்களத்திற்கு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக நியமனம் பெற்றுள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.
இவர் யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு கற்கைகள் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்துவிட்டு தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் பயிலுநர் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





