சட்டவிரோத சிகரெட் தொகையுடன் வெளிநாட்டவர் கைது

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, நேற்று (25) மாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 36,200 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் அவரிடமிருந்த கெப் ரக வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய மலேசியப் பிரஜை எனத் தெரியவந்துள்ளது.

கொம்பனித்தெரு பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore