அதிக விலைக்கு அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 05 கிலோ எடையுள்ள பொதியொன்றை கிலோவொன்று 350 ரூபா வீதம் விற்பனை செய்தமை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், வெல்லவாயவின் யாலபோவ பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா GR 11 அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 240 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கிலோவொன்றை 260 ரூபாவிற்கு அதிக விலைக்கு சில்லறையாக விற்பனை செய்தமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கும் வெல்லவாய நீதவான் நீதிமன்றம் 150,000 ரூபா அபராதம் விதித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore