வறட்சியான வானிலை குறித்து வௌியான எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு மாதங்களிலும் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியான வானிலையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதனால் உடலால் உணரும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும்
சிறைச்சாலை பதற்றம் – உயர் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்குகிறது: 65 பேர் பலி

இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,395 ஆக உயர்ந்துள்ளது.
அலைச்சறுக்கில் ஈடுபட்ட வௌிநாட்டு சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

வெலிகமை கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் இன்று (09) காலை அப்பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கைக்குச் சுற்றுலா
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி

கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த டிராக்டர் வண்டியின் பின்புறத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
பிரேசிலில் ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரின் வனப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஹெலிகொப்டரின் விமானி மற்றும் அதில் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 437 பேர் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு திசை குற்றப் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, மிரிஹானை, கோட்டே
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஜூலையில் 6.59 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 2026 ஜூலை மாதத்தில் 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2026 ஜூன் மாத இறுதியில்

