கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் அபாயம்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ (Caution) மட்டத்தை அடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடிய நிலையில், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக நீண்ட நேரம் நேரடியாக வெயிலில் இருப்பதைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore