இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (23) நிறைவடைந்துள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக தேவ்தத் படிக்கல் சிறப்பாகத் துடுப்பெடுத்து 117 ஓட்டங்களைப் பெற்றதுடன், அணித்தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் கேசர நுவந்த ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (24) நடைபெறவுள்ளது.





