முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் 2027 வருடாந்த இடமாற்றம் தொடர்பில் புதிய சுற்றறிக்கை

முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கான 18/2026 இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் வருடாந்த இடமாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

தமது விருப்பமான சேவை நிலையத்தில் 5 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்துள்ள அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், வேறு சேவை நிலையத்தில் 2 வருட சேவையை நிறைவு செய்துள்ள அதிகாரிகளும் இடமாற்றத்திற்கு தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் இணையவழி முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்காக அரச நிர்வாக அமைச்சின் MISCO இணைய முறைமை பயன்படுத்தப்படவுள்ளது.

அதிகாரிகள் தமது தனிப்பட்ட தகவல்கள், தற்போதைய மற்றும் முந்தைய சேவை நிலையங்கள் உள்ளிட்ட விபரங்களை சரியாகப் புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆகஸ்ட் 25 முதல் டிசம்பர் 31 வரை இடைக்கால அல்லது வழக்கத்திற்கு மாறான இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய விரும்பும் அதிகாரிகள், இடமாற்றக் கட்டளை தங்களுக்கு கிடைத்த திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் உரிய முறையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore